Skip to main content

Posts

Featured

பட்டினத்தார் அன்னையின் ஈமச் சடங்கு

  பட்டினத்தார் அன்னையின் ஈமச் சடங்கு பட்டினத்தார் தாயாருக்குத் தகனக்கிரியை செய்யும்போது பாடியவை “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்கிற வாசகமே பட்டினத்தாருக்கு ஞானம் தந்த வாக்கியம். பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். “அவருடைய ஈமச்சடங்கை நான் எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன்” என்று வாக்களித்திருந்த படி பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டிற்கு வந்து சேர்ந்தார். அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதையடுக்கி, “ஐயிரண்டு திங்களாயங்கமெலா நொந்து பெற்று” என்று பாடத் தொடங்கி, தம் தாயாரை தீயுண்ணச் செய்து தம் தாய்க்குரிய கடனைக் கழித்தார். பட்டினத்தார் சுடுகாட்டில் தன் தாய்க்கு ஈமச்சடங்கு செய்தபோது பாடிய பத்து பாடல்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை எப்பிறப்பில் காண்பேன் இனி? (1) முந்தித்தவம் கிடந்து முந்நூற...

Latest posts

பித்தா பிறை சூடீ பாடல் வரிகள்

தில்லை வாழ் அந்தணர் - சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு

சிவபுராணம் பாடல் வரிகள் | Sivapuranam - Manikavasagar

ஆயிரம் கரங்கள் நீட்டி

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil)