வெளிநாட்டவருடன்  பொங்கல் பண்டிகை ஆரோவில்லில் கொண்டாடப்பட்டது.

Auroville, India.

ஜனவரி 18, 2018 - தமிழர்களின் அடையாளம், தமிழர்களின் பாரம்பரியம், தமிழ் மக்களின் வரலாறாக கொண்டாடப்படும்  பண்டிகையான பொங்கல் பண்டிகை ஆரோவில் வாசியான வெளிநாட்டவர்களுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரெஞ்சு மக்களால் ஆலப்பட புதுவையின் அருகில் உள்ள  ஆரோவில்லில் குயிலாப்பாளையம் என்ற இடத்தில் மூன்று நாள் பொங்கல் பண்டிகை திருவிழா போல் கொண்டாடப்பட்டது. வெளிநாட்டினருக்கு இந்த பண்டிகை வித்தியாசமாக இருந்ததால் அவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் தமிழ் மக்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். குயிலாப்பாளையம் கிராமத்தில் பாரம்பரியமாக பொங்கல் பண்டிகை ஒரு வழிமுறையில் நடந்து வருகிறது. வருடம் முடியும் நாளாக கருதபடுகிற நாள் அன்று போகி பண்டிகை கொண்டாடுகின்றனர். அன்று அக்கிராமத்தில் பழைய பொருள்களை எரித்தும் சில வயதானவர்கள் ஒப்பாரி வைத்தும் இந்த நாளை கொண்டாடினர். தை பொங்கல் அன்று கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் எல்லையில் உள்ள ஐயனாரப்பன் கோவிலில் பொங்கல் வைத்து படைத்தனர். மாட்டு பொங்கல் அன்று வீட்டு வாசல்களில் பொங்கல் வைத்து சூரியனுக்கு வழிபட்டார்கள். முன்றாவது நாளான காணும் பொங்கல் அன்று மாடுகளுக்கு படையில் செய்து மாடுகளை எல்லைக்கு கொண்டு சென்று மஞ்சு விரட்டு நிகழ்சியும் நடந்தது.மேலும் வழக்கமாக நடைபெறும் ஆரன் தோப்பு என்ற சந்தையில் வீர விளையாட்டுகளும் குழந்தைகளுக்கான விளையாட்டுகளும் நடந்தது. உறியடித்தல், பளு தூக்குதல், பெண்களுக்கு கோலம்போடுதல், குழந்தைகளுக்கு தண்ணிர் நிரப்புதல் இது போன்ற நிகழ்சிகள் நடைபெற்றது . அனைத்து நிகழ்சிகளிலும் வெளி நாட்டினரும் கலந்து கொண்டனர். வெளிநாட்டு பெண்கள் அவர்கள் வீடுகளில் பொங்கல் வைத்து கொண்டாடினர். தமிழர்கள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டவரும் பொங்கல் பண்டிகை கொண்டடி மகிழ்ந்தனர்.

Comments

Post a Comment