களப்பயிற்சி (இண்டென்சிஃப்) | ஊடக துறை |


களப்பயிற்சி (இண்டென்சிஃப்)

லொயோலா கல்லூரி, ஊடக துறையில் இரண்டு வருட பயனத்தின் இறுதி ஆண்டில் மிக உபயோகமாய் அமைந்தது களப்பயிற்சி (இண்டென்சிஃப்). நாம் வேறு ஒரு நிறுவனத்திற்குச் சென்று பார்வையிட்டு, அங்கு வேலை செய்யும் போது தான் உண்மையான வேலை மேன்பாட்டினை கற்றுக்கொள்ள முடிந்தது. வேலைகள், வேலை செய்யும் முறை, உத்திகள், கையாளும் விதம், பொருப்புக்கள், கால அட்டவனைகள், நிறுவனத்தின் துறைகள் போன்ற பல விஷயங்களை அங்கு தான் கற்றுக்கொள்ள முடிந்தது. வாய்முறையாக படித்த ஒரு ஒரு விஷயமும் அங்கு செய்முறையாக செய்து பார்க்க முடிந்தது. ஒரு நல்ல அனுவத்தை இந்த களப்பயிற்சி கொடுத்தது. வாழ்வில் இந்த 45 நாட்கள் ஒரு பெரிய திருப்புமுனையாய் இருந்தது.

முதலில் இந்த புதிய அனுபவத்திற்க்கு பெரும் உதவியாய் இருந்த பேராசியர்களுக்கு தான் முதற்கண் நன்றி தெரிவிக்க வேண்டும். துறை பேராசிரியர் திரு. SS லாரன்ஸ் ஜெயகுமார் அவர்களுக்கு பெரும் நன்றிகள். மேலும் பேராசிரியர் ஆரோக்யராஜ் மற்றும் பேராசிரியர் சாம்சன் துறை அவர்களுக்கும் பெரும் நன்றிகள். இவர்களின் உதவி துணைக் கொண்டு இரண்டு வருட பயணம் முடிந்தது.
இரண்டாவதாக..! நான் இந்த அளவில் வளர துணையாக இருப்பது இந்த கல்லூரி மற்றும் மிக முக்கியமாக இருப்பது இந்த துறை மட்டுமே..! ஊடக துறை. எனவே கல்லூரிக்கும் துறைக்கும் மாபெரும் நன்றிகள்.
மூன்றாவதாக..! களப்பயிற்சி என் வாழ்கைக்கு ஏற்றார் போல் அமைந்துக்கொள்ள விரும்பினேன். சினிமா துறையில் களப்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். அதற்கு ஏற்றார் போல் சினிமா மற்றும் தொலைக்காட்சிகளுக்கு தயாரிப்பு செய்கின்ற  எஸ். எஸ். விஷ்வல் வென்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் களப்பயிற்சியில் இந்து வேலை பார்த்தேன்.. எனக்கு களப்பயிற்சி செய்ய வைப்பு கொடுத்தமைக்கு எஸ். எஸ். விஷ்வல் வென்சர்ஸ் நிருவனத்திற்கு மாபெரும் நன்றிகள்..
களப்பயிற்சி :
      களப்பயிற்சி பிப்ரவரி 6 முதல் மார்ச் 20 வரை செய்ய வேண்டிய கால அட்டவனை இருந்தது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு புதிய தொலைக்காட்சி மெகா தொடர் தொடங்க போவதாக கூறி இருந்தார்கள். எனவே ஆசிரியர்களிடம் ஆலோசனை கேட்டு 10 நாட்களுக்கு முன்னதாகவே களப் பயிற்சியை துவங்கினேன். எஸ். எஸ். விஷ்வல் வென்சர்ஸ் நிருவனத்திற்கு சன் தொலைக்காட்சியில் இருந்து ஒரு மெகா சீரியல் செய்யும் படி ஒரு வாய்ப்பு வந்தது. அதற்க்கான முழு வேலைகளை செய்ய துவங்கினோம். ஒரு தொலைக்காட்சி தொடர் துவங்கும் காலத்தில் இருந்து முடிவும் வரை வேலை பார்த்தோம். கால நேரம் பார்ப்பதில்லை. இரவு பகல் பார்பதில்லை.. அயராது உழைத்தோம். இது ஒரு புது அனுபவமாக இருந்தது. சினிமாவில் வேலை பார்த்தது உண்டு. இது தொலைக்காட்சி தொடர் என்பதால் ஒரு மாறுபட்ட அனுபவம் கிடைத்தது.  

தொலைக்காட்சி தொடரில் அனுபவம்:
தொலைக்காட்சி நிறுவனத்தில் நான் நல்ல முறையில் வேலை செய்ததால் உயர்  பதவியினை அளித்தார்கள். துணை இயக்குனர் . இது எனக்கு பெரும் சவாளாக இருந்தது. கடைசியாக திரைப்படத்தில் வேலை பார்க்கும் போது துணை இயக்குனராகத்தான் பணிபுரிந்தேன். ஆனால் இரு துறைக்கும் பல விதியசங்கள் இருந்தது. எனக்கு என்று ஒரு குழு.. கொடுக்கப்படும் வேலைகளை சரியாக முடித்து வந்தோம். முன் அனுபவம் பல இருப்பினும் இங்கு கற்றுக்கொள்வது புதிதாக இருந்தது.
கற்றுக்கொண்ட பாடங்கள்:
*      முதலில் நான் இனையும் போது அவந்திகா என்ற மெகா தொடர் எடுக்க உள்ளதாகவும் அதற்க்கான பணிகள் மிக பரபரப்பாக நடந்து வந்தது.
*      முதல் கட்டமாக, சன் தொலைக்காட்சில் இருந்தது ஒப்புதல் செய்தி வந்தது. அதன் படி அவர்கள் கதை, திரைகதை இவைகளை தயார் செய்து, அனுப்ப சொன்னார்கள்.
*      சுமார் இருவத்து ஐந்து எப்பிசோட் தாயார் செய்து அனுப்பினோம். அதை படித்து விட்டு ஒரு நாள் நேரில் வரவழைத்து கதையில் சில மற்றங்கள் கூறினார்கள். அது சிரியலுக்கு ஏற்ற படியாக இருந்தது. அது புது அனுபவமாக இருந்தது. சினிமாவிற்க்கும் தொலைக்காட்சிக்கும் வேரு வேரு கதை மாற்றங்கள் இருக்கும் என புரிந்து கொண்டேன்.
*      அதன் படி கதையில் சில விஷயங்களை மாற்றினோம். எங்களிடம் கதைக்கரு மிக அழுத்தமாக இருந்தது.. அது தான் எங்களின் வெற்றியின் காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். 
*      நடிகர் நடிகைகளின் தேர்தெடுத்தல் நடந்தது. எனக்கு முதல் முக்கிய வேலையாக நடிகர் நடிகர்களை தேர்ந்தேடுத்தல் பணியை கொடுத்தார்கள். அவர்களுக்கு முறையான வசனம் கொடுத்து முறை படுத்தி அவர்களை தேர்ந்தேடுக்க சொன்னார்கள். இயக்குனரின் ஆலோசனை படி தேர்வுசெய்தோம். எனக்கு அது பெரும் சவாளாக இருந்தது. சுமார் 150 நபர்களை ஒரே நாளில் ஆடிஷன் பார்த்தோம்.
*      தினமும் இரவு பகல் பார்க்காமல் திரைக்கதை தயார் செய்தொம். ஒரு காட்சி எப்படி சித்தரிக்க வேண்டும் என்பதனை இயக்குனர் திரு. லாரன்ஸ் அவர்களிடம் கற்றுக்கொண்டேன்.
*      சன் தொலைக்காட்சியில் சுமார் பத்து மீட்டிங் வைத்தார்கள். அதில் 8 மீட்டிங் நான் கலந்து கொண்டேன். ஒரு ஒரு நாளும் புதிய அனுபவத்தை கொடுத்தது. நிறைய பரிந்துறைகள் செய்யப்பட்ட்து.
*      ஒரு மீட்டிங் சன் லைப் தொலைக்காட்சியின் CEO காவியா கலாநிதி மாறன் உடன் இருந்தது. அனல் பறக்கும் மீட்டிங்காக இருந்தது. நாங்கள் ஒரு மணி நேரத்திற்கான ப்ரசெண்டேஷனை கொண்டு சென்றோம். அதை அனைத்தையும் சரியாக 20 நிமிடத்தில் பார்த்து விட்டு சம்மதம் தெரிவித்தார்கள். மெய் சிலிர்க்க வைத்த நிகழ்வாக இருந்தது.
*      மேலும் சன் டிவிக்கே ஒரு புதிய ப்ரசெண்டேஷனை கொடுத்தது எங்கள் அணியாக தான் இருந்தது. புதிய முறையில் வெரும் காகிதமாக இல்லாமல் அனைத்தையும் விடியோ தொகுப்புகளாக ஒப்படைத்தோம். அது அவர்களுக்கு மிக எளிமையாக புரியும் வண்ணம் இருந்தது. மேலும் இனி மேல் வரும் அணியிடம் இப்படி பட்ட பிரசண்டேஷனை தான் கேட்க போகிறோம் என்று கூறினார்கள்.
*      பின் வரும் விடியோ தொகுப்பில் அனைத்தையும் இனைத்து உள்ளோம்.
*      ஒரு நாள் பிரசண்டேஷனுக்கு சுமார் 48 மணி நேரம் எந்த வித இடைவுருகள் இல்லாமல் தொடர்ச்சியாக வேலை பார்த்தோம். அது தான் எனக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது.
*      எங்கள் கதைக்கு மிக முக்கியமாக அமைவது கணினி கிராபிக்ஸ். அதே போல் காவியா மாரனும் அதைதான் முதலில் பார்ப்தாக கூறி பேரும் பயத்தை கொடுத்து விட்டார்கள். கிராபிக் செய்யும் அளவில் இங்கு சரியான அணியை நாங்கள் தேர்தெடுக்கவில்லை.. அதனால் பல நாட்கள் அலைந்தோம். இருதியில் ஒரு நல்ல அணி புலப்பட்ட்து. அவர்களை வைத்து மாதிரி கிராபிக் உருவக்கினோம். அந்த மாதிரியும் விடியோ தொகுப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
*      இதன் மூலம் மிக முக்கியமாக கற்றுக்கொண்ட பாடம், லொக்கேஷன் பிரிப்பு, கலை பொருட்கள், லொகேஷ்ன் சென்று பார்பது, நடிகர்களை தேர்ந்தெடுப்பது,  ஃபமலி டிட்ரி, திரைக்கதை தயாரித்தல், வசனங்கள் எழுதுதல், கிரபிக் ரேடி செய்தல், அறிமுக ஷூட் எடுத்தல் இது போன்ற பல வேலைகள் இந்த ஒரு மாத களப்பயிற்சியில் கிடைத்தது.
*      மேலும் ஒரு பாடலுக்கு எப்படி விஷ்வல் எடுக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டேன். அவந்திகா தலைப்பு பாடலுக்கு இருக்கும் விஷ்வல் வைத்து ஒரு விடியோ ரெடி செய்தோம்.
இது போன்ற பல விஷயங்களை இந்த களப்பயிற்சியின் மூலம் நான் கற்றுக்கொண்டேன்.
கல்வியில் கற்றுக்கொடுத்த பாடங்கள் களப்பயிற்சியில் எப்படி பயன்பட்டது:
*      பல இயக்குனர்கள் பாட சாலைக்குச் செல்லாமல் படங்களை எடுத்துள்ளனர். ஏன் பல இயக்குனர்கள் சம்மந்த பட்ட சினிமா துறையை சார்ந்த படிப்புக்கள் படித்திருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் பெரிய ஜாம் பவான்களாக இருப்பார்கள். என்னை கேட்டால் அவர்கள் இது போன்ற சினிமா துறைக்கான படிப்புகள் படித்து விட்டு வந்திருந்தால் பெரும் இமையமாகியிருப்பார்கள்.. காரணம் இந்த இடத்தின் என்ன கற்றுக்கொடுத்தார்களோ அது தான் எனக்கு பெரும் உதவியாக இருந்தது.
*      ஒரு விஷயம் சொல்லப்போனால், களப்பயிற்சியில் தமக்கு யாரும் சொல்லிக்கொடுக்க மாட்டார்கள். நாம் தான் புரிந்து கொண்டு அவர்கள் சொல்லும் வேலையை சரியாக முடித்து தர வேண்டும். அப்படி இருக்க நீ எங்கு கற்றுக்கொள்வாய் என்று கேட்டால், நான் கற்றுக்கொண்டது முழுக்க முழுக்க கல்லூரியில் தான். அதும் குறிப்பாக ஊடக துறையில் மட்டுமே.
*      இங்கு சொல்லி கொடுத்த அனைத்தையும் எனக்கு அங்கு உபயோகமாக இருந்தது. ஒரு ஒரு நாளும் ஒரு ஒரு நிமிடமும் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் கண் முன் நின்றனர். எனவே அவர்களுக்கு இந்தருணத்தில் மனமுறுகி நன்றி தெரிவிக்கிறேன்.
பாடங்களும் கற்றுக்கொண்ட விதமும்:
*      பாடம் 1 - தகவல் தொடர்புபேராசிரியர் ஆரோக்யராஜ் அவர்கள் எடுத்தது. தகவல் தொடர்பினை பற்றி சொல்ல முடியாது. ஒரு ஒரு இடத்திலும்  இல்லை எனில் பிழைக்க முடியாது. ஐயா கூறியதில் குழு தகவல் தொடர்பு பெரும் உதவியாக இருந்தது. எனது குழிவினை நல்ல முறையில் வழி வகுத்து செல்ல தகவல் தொடர்பு பெரும் உதவியாக இருந்தது
*      பாடம் 2 – தொலைக்காட்சி நிகழ்சிகள்சாம்சன் துறை தொலைக்காட்சி என்பதனால் இந்த பாடம் எனக்கு மிகுந்த அளவில் உதவியாக இருந்தது. அங்கு நடைபெறும் முறை அதாவது 30 நிமிடத்தை :ஸ்லாட் என்றும் 10 நொடிகள் ஸ்பாட்  என்றும் மேலும் டி.ஆர்.பி இது போன்ற விஷயங்களை இந்த பாடம் கற்றுக்கொடுத்ததுக
*      பாடம் 3 – போடோகிரப்பி - ஆரோக்யராஜ் நல்ல  முறையில் புகைப்படம் எடுக்க கற்றுக் கொடுததால், லொக்கேஷன் சென்று புகைப்படம் எடுக்க முடிந்தது. பல உதவி இயக்குனர்கள் இருப்பினும் இந்த திறன் இருந்ததால் தான் என்னை உடன் அழைத்துச்சென்றார்கள்.
*      பாடம் 4 – டி. டி. பி. – சாம் சன் துறைஎனக்கு முதல் முக்கிய காரணிகளாக கேட்கப்பட்டது. புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டா..? இரண்டாவது கேட்ட கேள்வி டைபிங் செய்ய தெரியுமா? ஆம் தெரியும்..! நான் நிலை பெற்றதற்கு காரணம் இது. முதல் நிலையிலே எனக்கு இந்த கல்லூரி டைப்பிங் கற்றுக் கொடுத்து விட்டது.
*      பாடம் 5 – தொலைக்காட்சி தொடர்கான திட்டம் -  பேராசிரியர் லாரன்ஸ் ஜெயகுமார் . அன்று எங்களுக்கு சொல்லிக்கொடுத்து இப்படி தான் ஒரு தொலைக்காட்சி தொடர்க்கான திட்டம் கொடுக்க வேண்டும் என்று கூறிய படி, எந்த மற்றமும் இல்லாமல் இன்று சன் தொலைக்காட்சியில் கொடுத்தோம். உன்மையில் இது பெரும் அளவில் அவர்களுக்கு பிடித்து, இதன் பின் வரும் அணிகளிடம் இது மாதிரியான திட்ட்த்தை தான் சமர்பிக்க சொல்ல போகிறோம் என்றார்கள்.
*      பாடம் 6 – போடோ ஷாப்சாம் சன் துறைபுகைப்படம் எடிட் செய்ய சொல்லி கொடுத்தமையால் இங்கு அனைத்து இடந்திலும் எனக்கு பயன்பட்டது. லோகோ, நடிகர்களின் புகைப்படங்கள் எடிட் செய்ய, போஷ்டர் இது போன்று செய்யும் போது எனக்கு பெரும் உதவியாக இருந்தது.
*      பாடம் 7 – மீடியா பிஸ்னஸ் & மனேஜ்மண்ட்லாரன்ஸ் ஜெயகுமார்இந்த பாடம் எனது வாழ்கையே திருப்பி போட்ட பாடம். வேரும் சாதிக்க வேண்டும் என்ற என்னம் மட்டும் போதாது. அதற்கான உத்திகளை பயன்படுத்த வேண்டும் என்று கூறிய பாடம். மிக தெளிவான முறையில் பேராசிரியார் லாரன்ஸ் அவர்கள் எடுத்தார்கள். இதில் எடுக்கப்பட்ட அனைத்தும் இங்கு ஒத்துப்போனது. மிக முக்கியமாக டைம் மேனேஜ்மண்ட், மணி மேனேஜ்மண்ட் மேலும் பல..
*      பாடம் 8 – ஃபில்ம் மேக்கின்எல்லாவற்றிக்கும் மேல் மிக சிறந்த, பெரும் உதவியாக இருந்த ஒரு பாடம் இது, பேராசிரியர் லாரன்ஸ் அவர்களின் மூலமாக பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். இது தான் முழுக்க முழுக்க பலமாக இருந்தது. நான் இங்கு அங்கிகரிக்கப்பட்டது இதனால் தான்.
முடிவுரை:
இருதியாக அனைத்துப் பாடங்களும் ஒருவித மூலமாக எனக்கு பேரும் உதவியாக இருந்தது. இங்கு குறிப்பிடவில்லை என்றாலும். அனைத்துமே உபயோகமாக இருந்தது. கண்டிப்பாக இந்த தருனத்தில் அனைத்து பேராசிரியகளுக்கும் நன்றி கூறிதான் ஆக வேண்டும். கல்லூரியில் அவர்கள் திட்டியதால் தான் என்னவோ நான் இங்கு எந்த திட்டுதலும் இல்லாமல் உள்ளேன். மேலும் அவர்கள் பட்டைத்தீட்டியதால் தான் இங்கு வையிரமாக மின்னுகிறோமோ என்னவோ..!



Comments