இணைய கதைகள் | அத்தியாயம் ஒன்று
அத்தியாயம் ஒன்று
" பேருந்தில்
தற்கொலை"
வழக்கம் போல் வேலையின்
காரணமாக சென்னைக்கு புறப்பட்டேன்… ஆனால் வழக்கதிற்க்கு மாறாக திங்கட்கிழமை செல்லாமல்
ஞாயிறு இரவே புறப்பட ஆயித்தமானேன். மருநாள் கோக்குல அஷ்டமி வீட்டில் ஒரே கோலகலமாக கொண்டாடுவோம்.
அதை விட்டு விட்டு போகதான் மனசு இல்லை. ஆனால் வீட்டில் சும்மா இருக்கவும் முடியவில்லை.
கிளம்பினேன் இரவு 7 மணிக்கு…
பாண்டி {டு} சென்னை
பேருந்து சரியாக 07:05-க்கு வந்தது.
வழக்கமாக ஏறும்
ஆரோவில் பேருந்து நிலையத்தில் ஏறினேன். ஒரு கார் முந்தி கொண்டு வந்தமையால் பேருந்து
எங்கு நிறுத்தாமல் சென்று விடுமோ என்ற பயம் ஒரு பக்கம். சென்றால் தான் என்ன? இதை சாக்காக
சொல்லி நாளை வேலைக்கு செல்லலாம் என்று என்னமும் ஒரு பக்கம். யோசிக்கும் இரு நொடியில்
என் அருகில் வந்து நின்றது பேருந்து. மனதை திட படுத்திக்கொண்டு விட்டின் நினைவுகளை
மூட்டை கட்டிக்கொண்டு பேருந்தில் ஏறினேன். கூட்டம் பெரிதாக இல்லை. இருந்தாலும் எனக்கு
பிடித்த மாதிரி சன்னல் இருக்கை கிடைக்க நான் கடைசி இருக்கைக்கு முன் இருக்கைக்கு செல்ல
வேண்டியது இருந்தது. என்னுடைய பெரிய பேகினை மேலே உள்ள ரேக்கில் வைத்து விட்டு அமரும்
போது ஒரு அழு குரல் கேட்டது. பின் இருக்கையில் பார்த்தால் ஒரு திடமான இளைஞன் புலம்பிய
படி அழுதுக்கொண்டிருந்தான். என்ன புலம்புகிறான் என்று எனக்கு சரியாக புலம்பவில்லை.
ஆனால் எனக்கு வாழவே புடிக்கல… நான் சாகப்போறனு சொல்றது மட்டும் கேட்டுது
- இணைய கதைகள் –
- தொடரும் -
Comments
Post a Comment