இணைய கதைகள் | அத்தியாயம் மூன்று

 

அத்தியாயம் மூன்று

காதலின் பிரிவு

அவனது கதை ஒரு காதல் கதை…!

                 அவனை நன்கு உற்றுப் பார்த்தேன்… அவனது கையில் ஆபத்தான பொருள் ஏதும் இல்லை. அவன் வெளியே குதிக்கும் அளவில் சன்னலும் பெரிதாக இல்லை..! நிதானத்துடன் எனது சீட்டில் அமர்ந்தேன். அவன் யாரிடம் உரையாடுகிறான் என்பதை ஒரிரு வரிகளில் புரிந்து கொள்ள முடிந்தது. அவனுடைய நண்பனுடன் தான் உரையாடிக்கொண்டிருக்கிறான் என்பதை புரிந்து கொண்டேன்.

அவ என்ன ஏமாத்திட்டா டா… அவள எவ்வளோ லவ் பன்னேன் தெரியுமா.. இன்னைக்கி எங்க அப்பா அம்மா எல்லாரையும் இழந்துட்டு நிக்குறேன் டா.. 

                 என்று அவன் கதறி அழுத சத்தம் பேருந்தில் உள்ள ஒரு சில நபருக்கு கேட்டிருக்கும். ஆனால் காதில் விழாத படி அனைவரும் அவர்களது வேலையை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

                 இரக்கமற்ற மனிதர்கள்…

                 ஆனால் என் மனம் தான் தாங்கவில்லை. யார் என்ன நினைத்தால் என்ன..? உன் கால் தடம் ஒரு பாதையை உருவாக்கும் என்று நினைத்து எழுந்து நின்றேன். மீண்டும் என்னை அனைவரும் பார்த்தார்கள். இந்த முறை கூச்சப்படவில்லை அவன் அருகில் சென்று அமர்ந்தேன். 

                 அவன் போனில் பேசிய படி... நான் அமர்ந்ததை ஓரக் கண்ணால் பார்த்தான். ஆனால் எந்த ரியாக்‌ஷனும் இல்லை. மேலும் சில வரிகள் அவன் பேசியதை என்னால் கேட்க முடிந்தது.

அவ தான் டா இன்னைக்கி வர சொல்லி கூப்டா..! ஆனா அங்க கதையே மாத்திட்டா டா..! என்னோட அப்பா என்ன செருப்பால அடிச்சி வெளிய துரத்திட்டாரு டா... என்று அவன் அழும் போது என் கண்களில் கண்ணீர் முட்டியது...

எனக்கு யாருடா இருக்கா... நான் எங்க போவன் –னு சொல்லி கதறும் போது கண்ணுக்குள் இருந்த கண்ணீர் வெளியில் கசிந்தது. பேருந்தில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து யாருக்கும் தெரியாமல் கண்களை துடைத்துக்கொண்டேன்..!

அவ்வளவு தான். எல்லாமே முடிந்தது. நான் மூன்று வருடம் காதலித்த பெண் என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். எனது பெற்றோர் செருபால் அடித்துவிட்டார்கள். அவளுக்காக கடினப்பட்டு செய்த வேலையை இழந்துவிட்டேன். இந்த நேரத்தில் என் ஊர் முழுவதும் என்னை பற்றிய செய்தி உலா வந்திருக்கும். இதற்கு மேல் நான் ஏன் வாழ வேண்டும் என்று அவனது நண்பனிடம் கேள்வி கேட்கும் போது மரக்கானத்தில் பேருந்து நின்றது...

நேற்றைய அத்தியாயத்தை படித்த கதை வாசி ஒருவர் கமெண்டில் அழகான வசனம் ஒன்றினை பதிவு செய்திருந்தார்.

காதல் - ஒரு மனிதனை

வாழவும் வைக்கும்

மரணிக்கவும் வைக்கும்என்றார்.

                 உண்மை தான். காதல் என்பது ஒரு சகாப்த்தம். காதல் உணர்வு பெறாத மனிதர்களே இல்லை...!

                 அம்மா மீது கொண்ட காதல் இயற்கையானது. அப்பா மீது கொண்ட காதல் உறுதியானது. நண்பர்கள் மீது கொண்ட காதல் உட்சமானது. உறவினர்கள் மீது கொண்ட காதல் தேவையானது. இவற்றை எல்லாம் விட ஒரு காதல் உண்டு. தலைவி மீதோ அல்லது தலைவன் மீதோ கொள்ளும் காதல் புணர்ச்சிக்கானது. இதன் உணர்ச்சிக்கு அளவில்லை. அதனால் தான் காதல் ஒரு மனிதனை வாழவும் வைக்கும் மரணிக்கவும் வைக்கும்.

பேருந்து புறப்பட்டது... காற்று மெல்லமாக என் பக்கம் வீசியது… திடீரென சலசலவென்று ஒரு சத்தம். கையில் ஒரு விதமான கண்ணாடி பாட்டில். கண்முடி திறக்கும் நேரத்திற்குள்…

- இணைய கதைகள்

- தொடரும் -

எழுத்து-ஜெகன் ஜே.கே

Comments

  1. ஒரு கதையின் வெற்றி அதன் சுவாரசியத்தை பொருத்தே அமையும்... உங்கள் கதையும் சுவாரசியத்தை அதிகப்படுத்துகிறது... காத்திருக்கிறேன் அடுத்த அத்தியாயத்திற்கு....

    ReplyDelete
  2. பிடித்தவர்கள் எல்லாம் இறுதிவரை
    உடன் இருந்துவிட்டால்........வலியின்
    அர்த்தமே தெரிந்திருக்காது ..

    ReplyDelete

Post a Comment