இணைய கதைகள் | அத்தியாயம் நான்கு
அத்தியாயம் நான்கு
“பிரிவில்
உறவு”
கையில் ஒரு விதமான கண்ணாடி பாட்டல்..
சில நேரத்தில் நாம் எது நடக்க கூடாது என்று நினைக்கிறோமோ அது நடந்தே தீறும். எது நடக்கவேண்டும் என்று விரும்புகிறோமோ அது நடப்பதே இல்லை. அது தான் இயற்கையின் விதி.
நான் பேருந்தில் ஏறிய நொடி முதல் இப்போது வரை என் சிந்தனை முழுவது அவனின் மீது தான் இருந்தது.. சிரிது நேரத்தில் அவன் செய்த காரியம் பெறும் அதிர்ச்சிக்குள்ளானது.
கையில் மது பாட்டில், இவ்வளவு நேரம் எங்கு மறைத்து வைத்திருந்தான் என்பது எனக்கு புலப்படவில்லை.. அதை குடிக்க முயற்சித்தான்.
இந்நேரத்தில் அவனுடன் அறிமுகமாவது சரியான தருனம் என்பதை உணர்ந்தேன்.
தம்பி... பேருந்தில் மது அருந்துவது தவறு..! என்பதே எனது முதல் வரிகளாக இருந்தது. அதற்கு எதிர் பதில் வரவில்லை.. மாற்றாக கண்ணீர் துளிகள் மட்டுமே வந்தது. அவனது கண்ணீர் துளிகள் மெல்ல கிழே விழுவதற்குள் அவனை இருக்கி அனைத்துக்கொண்டேன்,
“தம்பி நான் இருக்கிறேன்.. என்னை ஒரு நல்ல அண்ணனாக நினைத்துக்கொள்.” என்றேன்..
அதற்கு அவன்.. என் சட்டையை பிடித்து அழுதது இன்று வரை நினைவில் இருந்து அழியவில்லை..
இரண்டு நிமிடம் எடுத்துக்கொண்டான். அவனது தலையில் கை வைத்து தடவி படி..
அழாதே தம்பி.. அழாதே..
உன் அருமை அறிந்து உன்னை விட்டு சென்றவள் வருவாள்..
இதற்கு பிறகு நீ உழைக்கும் உழைப்பை பார்த்து இந்த சமுகம் உன்னை மெச்சிக்கும்.
பெற்றவர்கள் என்றுமே பெற்றோரடா உனக்கு ஒரு போதும் தீங்கு நினைக்க மாட்டர்கள். அவர்கள் உன் மீது வைத்த பாசம் உன்மையானது. நீ பிறக்கும் முன்பே உன்னை இரசித்தவர்களடா.. உன்னை ஒரு போதும் இகழ மாட்டார்கள். இந்நேரம் நீ அழுவதை விட பல மடங்கு அவர்கள் அழுந்து கொண்டிருப்பார்கள். உன் இழப்பை உன் குடும்பம் தாங்காது. முதலில் நீ வீடு திரும்பு என்றேன்..
…
இழப்பின் வலியை பற்றி ஒரு அழகான வரிகளில் நமது கதை வாசி கமெண்டில் பதிவு செய்திருந்தார்.
“பிடித்தவர்கள் எல்லாம் இறுதிவரை உடன் இருந்துவிட்டால்..
வலியின் அர்த்தமே தெரிந்திருக்காது..”
ஆம்.. இழப்பின் போது தான் வலியை உணர்கிறது மனம். இழப்பு என்பது ஒரு கொடுமையான வலி.. ஒருவரை இழந்த வலிக்கு மருந்து தேடுவது மிகவும் கடினம். உங்களது மனதை பக்குவ படுத்திக்கொள்ளுங்கள். இந்த உலகம் நிரந்திரமற்றது, பிறப்பும் இறப்பும் நம்மால் உகிக்க முடியாது .
…
மெல்லமாக என்னை விட்டு விலகினான். நீங்கள் சொல்வது எதுவும் நடக்காது. நான் அவளை இழந்து விட்டேன். அவள் திரும்பவும் வர மாட்டாள்...
…
- இணைய கதைகள் –
- தொடரும் -
எழுத்து-ஜெகன் ஜே.கே

Comments
Post a Comment