இணைய கதைகள் | அத்தியாயம் ஐந்து
அத்தியாயம் ஐந்து
“உறவில்
காதல்”
அவள் திரும்பவும் வர மாட்டாள்...
உண்மையான காதல் அழிவதில்லை என்று பலர் சொல்லி கேள்விபட்டிருக்கிறேன்.. நான் அவளை உண்மையாக தான் காதலித்தேன் ஆனால் இன்று என்னை ஏமாற்றிவிட்டாள்.. என்று அழுதுக்கொண்டு புலம்பினான்.
தம்பி முதலில் உண்மையாக காதலித்தேன் என்று கூறுவதை நிறுத்து. காதலுக்கு உண்மை, பொய் தெரியாது. தெரிந்தது நம்பிக்கை மட்டுமே..
…
புத்தகத்தின் பெயர் எனக்கு சரியாக நினைவு இல்லை. ஆனால் அதில் குறிப்பிட்டிருந்த கருத்து நன்றாக நினைவில் உள்ளது. ஆண்கள் மகரந்தம் போல், பெண்கள் பூமி போல் என்ற ஒரு ஆழ கருத்தினை கூறி இருந்தார் டாக்டர் ஷாலினி.
இயற்கையாகவே ஆண்கள் குணம் விதையை தூவுவது. அவர்களுக்கு உடலளவில் எந்த வித மாற்றமும் நிகழாது. ஆனால் பெண்கள் அதை தாங்கும் பூமி போல். ஒரு முறை அந்த விதையை தாங்கினால், உடல் மிக பெரிய மாற்றத்தை சந்திக்கும்.
நம்பிக்கைக்கும் இதற்கும் என்ன சம்மந்தம் உள்ளது..? என்று உங்களுக்கு குழப்பம் வரலாம். இங்கு பெண்மைக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.
“மகரந்தத்தின் மீது கொண்ட காதலினால் தான் பூமி விதையை தாங்க சம்மதிக்கிறது. மகரந்தம் இறுதி வரை நம்மை காக்கும் என்ற நம்பிக்கை தான் காதல் அழியாமல் நிலை நிற்கிறது.”
…
அப்படி என்றால் அவளுக்கு கொடுத்த நம்பிக்கையை நான் காப்பாற்ற தவறிவிட்டேனா..? என்றான்.
அது எனக்கு தெரியாது தம்பி. நீ.. உன் காதலிக்கு நம்பிகை கொடுக்க தவறி இருக்கலாம் என்றேன்.
என் காதலை பற்றி முழுமையாக தெரியாமல் எப்படி நீங்கள் பேசலாம் என்று திட்டினான்.
இப்படி பட்ட கடும் வார்த்தையை சொன்னால் அவன் மனதில் வைத்திருந்த கவலைகள் எல்லாம் என்னிடம் சொல்ல வாய்ப்பு உள்ளது என்று மனதில் நினைத்த நேரத்தில் அவனது காதல் கதையை சொல்ல ஆரமித்தான்.
அவன் பெயர் ஆனந்தன் என்றான்.
அவனது பெயரை கண்டுபிடிக்க ஒரு மணி நேரம் ஆனது. எல்லை அம்மன் கோவில் பேருந்து நிருத்தம் வந்தது. கண்டெக்டர் சில பயனிகளை ஏற்றினார். அதில் ஒரு பெண் என்னை
ஏறினாள். படியில் இருந்து ஏறியதும் என்னை பார்த்து கை அசைத்தால். மீண்டும் பேருந்து புறப்பட்டது.
நந்தினி அவளது பெயர். லயோலா கல்லூரி படிக்கும் போது எனக்கு ஜூனியராக கல்லூரி வந்து சேர்ந்தால். அடிக்கடி பேருந்தில் சந்திப்பது வழக்கம். சில நேரங்களில் பிடித்தமான சீட்டினை அவளுக்கு விட்டுக்கொடுக்க நேரிடும். இதனால் இருவருக்கும் நல்ல நட்பு உண்டானது. இப்பொழுது அவள் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள். இன்னும் பேருந்தில் சந்திப்பு நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. இருவருக்குமான நட்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பேருந்தில் ஏறியதும் அவள் அமர்வதற்காக சீட்டினை தேட மாட்டள் நான் இருக்கிறேனா என்று தான் தேடுவாள். காரனம் நான் இருந்தால் எனது அருகில் சீட் காலியாக தான் இருக்கும் என்ற ஒரு நம்பிக்கை தான். இன்றும் அதே போல் தான் என்னை பார்த்துவிட்டு கை அசைத்தால். ஆனால் இன்று அவளுக்கு சீட் இல்லை. ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
…
- தொடரும் -
எழுத்து-ஜெகன் ஜே.கே

Comments
Post a Comment