ஆயிரம் கரங்கள் நீட்டி
ஆயிரம் கரங்கள் நீட்டிஅணைக்கின்ற தாயே போற்றி!அருள் பொங்கும் முகத்தைக் காட்டிஇருள் நீக்கும் தந்தாய் போற்றி!தாயினும் பரிந்துசாலச் சகலரை அணைப்பாய் போற்றி!தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம்துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!தூயவர் இதயம் போலத்துலங்கிடும் ஒளியே போற்றி!தூரத்தே நெருப்பை வைத்துசாரத்தைத் தருவாய் போற்றி!ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி!நானிலம் உள நாள் மட்டும்போற்றுவோம்போற்றி போற்றி!

Comments
Post a Comment