இணைய கதைகள் | அத்தியாயம் இரண்டு

 

அத்தியாயம் இரண்டு

தற்கொலையில் காதல்

எனக்கு வாழவே புடிக்கல… நான் சாகப்போறன் என்று போனில் யாரிடமோ பேசிக்கொண்டு இருந்தான்.

மனதில் ஒரு பதற்றம்… தீடிரேன சன்னல் வழியாக குதித்து விடுவானா..? அல்லது விஷ மருந்தை குடித்து விடுவானா..? இல்லையேன்றால் கையில் ஏதேனும் கத்தி வைத்திருந்து கையை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்வானா..? என்ற குழப்பமான நிலமையில் எனது சீட்டில் அமர்ந்தேன்..!

                 அமர்ந்த வேகத்தில் மீண்டும் எழுந்தேன்.. கண்டிபாக அவன் தவறான முடிவு எடுப்பதற்க்குள் நாம் ஏதேனும் செய்தாக வேண்டும். குறைந்த பட்சம் அவன் அருகிலாவது அமற வேண்டும் என்று ஆவேசத்துடன் எழுந்தேன். ஆனால் மனதில் ஒரு பயம்..! அவன் இருக்கும் கடுப்பில் எதேனும் கத்தி எடுத்து எனது நெஞ்சில் சொருகி விட்டனா என்ன செய்வது...!

கதை வாசிகளே..! நீங்கள் இங்கு ஒன்று கவனிக்க வேண்டும்.. சமுகத்தில் சமுக சேவை செய்வது அவசியமே.. மனித நேயம் கண்டிப்பாக தேவை. ஆனால் அவசரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவு உங்களுக்கு பிரச்சனையை வர வைக்களாம். எனவே எந்த முடிவு எடுத்தாலும் உதவ வேண்டும் என்ற என்னத்துடன், உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதில் மிக கவனமாக இருங்கள்.

நான் வேகமாக எழுந்ததை அவனை தவிர பேருந்தில் இருந்த அனைவருமே பார்த்தார்கள். மேலே வைத்திருந்த எனது பேகினை சரி செய்வது போல் சமாளித்தேன்.

அந்த நேரத்தில்..

சார் எங்க போகனும்..? என்று கண்டெக்டர் விசாரித்தார்.

எனக்கு போதுவாகவே கண்டெக்டரையும் டிரைவரையும் மிகவும் பிடிக்கும்.. அவர்களது தியாகம் தான் நம் பயனத்தை அழகாக்குகிறது. அதனால் எந்த பேருந்தில் சென்றாலும் இறங்கும் போது இருவருக்குமே நன்றி சொல்வது வழக்கம்.

இப்போது அவரிடம் நன்றி சொல்லவில்லை..  சென்னைக்கு செல்ல வேண்டும் என்று சொல்லி 155 ரூபாய் கொடுத்து எனது பயனச் சீட்டினை வாங்கினேன்..

                 இவை எல்லாம் நடக்கும் அதே நேரத்தில் எனது முழு கவனமும் அவனின் மீது தான் இருந்தது. அவனது உடை, பேச்சு, அவன் கையில் வைத்திருந்த போன். அதில் பேசிய உரையாடல் இவை அனைத்தையும் வைத்து ஒரு முடிவுக்கு வந்தேன். 

அவனது கதை ஒரு காதல் கதை என்று…! 




- இணைய கதைகள்

- தொடரும் -

எழுத்து-ஜெகன் ஜே.கே

Comments

  1. காதல் - ஒரு மனிதனை வாழ்வும் வைக்கும் மரணிக்கும் வைக்கும்... கதைக்காக காத்திருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. காதல் - ஒரு மனிதனை வாழவும் வைக்கும் மரணிக்கவும் வைக்கும்..
      பிள்ளைகளுக்கு மண்ணிக்கவும்

      Delete
  2. Machan story Nalla poittu irukku keep it up

    ReplyDelete

Post a Comment